ஐபிஎல் 2026: பஞ்சாபை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்

ஐபிஎல் 2026 தொடரில், சன்ரைஸ்ர்ஸ் ஹைதெராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

1 மணி நேரத்திற்கு முன்
ஐபிஎல் 2026: பஞ்சாபை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்

ஐபிஎல் தொடரின் 49வது லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்களான ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா வேகமாக ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். ஹெட் 38 ரன்களும், அபிஷேக் சர்மா 35 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷன் தனது வழக்கமான தாக்குதலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஹெயின்றிச் கலாசேன் பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்து 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இறுதிக்கட்டத்தில் நிட்டிஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் என்ற மலைப்போன்ற இலக்கை நிர்ணயித்தது.

பின்னர் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே சீராக அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணியில் கூப்பர் மட்டும் தனி ஆளாகப் போராடினார். அவர் ஹைதராபாத் பந்துவீச்சை தைரியமாக எதிர்கொண்டு 59 பந்துகளில் 107 ரன்கள் குவித்து சதம் பதிவு செய்தார். இருப்பினும் மற்ற வீரர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் சிவாங் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...