இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் புற்றுநோயால் காலமானார்!

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் இன்று காலமானார்.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் புற்றுநோயால் காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங், புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று (பிப்.27) உயிரிழந்தார். கல்லீரல் புற்றுநோய்க்காக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு குடும்பத்தைக் கவனித்து வந்த கான்சந்த் சிங், தனது மகன் ரிங்கு சிங் கிரிக்கெட் உலகில் சாதனை படைப்பதில் உறுதுணையாக இருந்தார். தற்போது உலகக் கோப்பை தொடருக்காகத் தயாராகி வரும் ரிங்கு சிங், தந்தையின் மறைவையடுத்து இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அலிகார் விரைந்துள்ளார். அவரது மறைவிற்கு சக கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...