22 வயதான உலகின் நம்பர்-2 வீரரான அல்காரஸ், வலது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் போட்டியின் முதல் சுற்றிலேயே அவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாட்ரிட் ஓபன் மற்றும் இத்தாலியன் ஓபன் ஆகிய போட்டிகளிலிருந்தும் அவர் விலகியிருந்தார். தற்போது பிரெஞ்ச் ஓபனிலிருந்தும் விலகியிருப்பது, அவரது உடல்நிலை முழுமையாக சீராகாததை வெளிப்படுத்துகிறது.
2026 சீசனில் அல்காரஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலியான் ஓபன் மற்றும் கத்தார் ஓபன் போன்ற முக்கிய பட்டங்களை கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து சிறந்த செயல்திறன் காரணமாக, அவர் சமீபத்தில்' லாரஸ் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் அவார்ட்' விருதையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், பிரெஞ்ச் ஓபனில் இருந்து அவரது விலகல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.
இதுகுறித்து அல்காரஸ் வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவ பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகுகிறேன். காயத்திலிருந்து முழுமையாக மீண்டு, வலிமையுடன் மீண்டும் போட்டிக்கு திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்
