ஜொஹன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோருக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். தொடர்ந்து தீப்தி சர்மா 36 ரன்கள், ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து 186 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்தியா தரப்பில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா, 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் தன்னம்பிக்கையை மீட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
