நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு

தொடரின் முதல் போட்டிக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 மணி நேரத்திற்கு முன்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 சீசனின் முக்கிய தொடராக கருதப்படும் இந்த போட்டி, வரும் ஜூன் 4ஆம் தேதி லண்டலில் உள்ள லார்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து அணியை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துகிறார்.

அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரேஹான் அகமது, கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பென் டக்கெட், மேத்யூ ஃபிஷர், எமிலியோ கே, ஜேம்ஸ் ரியூ, ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி 8வது இடத்தில் உள்ளதால், இந்த தொடர் அணிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...