பெல்ஜியம் கார் பந்தயம்: 2வது இடம் பிடித்த அஜித் குமார் ரேசிங் அணி

நடிகர் அஜித் குமார் தலைமையிலான ரேசிங் அணி, பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

3 வாரங்களுக்கு முன்
பெல்ஜியம் கார் பந்தயம்: 2வது இடம் பிடித்த அஜித் குமார் ரேசிங் அணி

தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார், நடிப்புடன்

கார்பந்தயத்திலும் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அவரது அஜித் குமார் ரேசிங் அணி, கடந்த ஆண்டு பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது.

குறிப்பாக துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளிலும் அணி பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜிடி வேர்ல்ட் சேலஞ்ச் ஐரோப் தொடரில் அணி 9வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டு தொடங்கி 2027 ஜனவரி 17 ஆம் தேதி வரை பல்வேறு கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்கும் அட்டவணையை சமீபத்தில் இந்த அணி வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தற்போது நடைபெற்று வரும் "லே மென்ஸ் கப்" தொடரிலும் அணி பங்கேற்று வருகிறது.

பெல்ஜியத்தில் நடைபெற்ற 24H Series GT3 Pro-Am கார் பந்தயத்திலும் அஜித் குமார் அணி 2வது இடத்தைப் பிடித்து மேலும் ஒரு சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி அஜித் குமார் மற்றும் அவரது அணியினர் வெற்றியை கொண்டாடினர். இதன் மூலம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...