வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; வெண்கலம் வென்றார் சாஹில் ஜாதவ்

இந்த தொடரில் இந்தியா வென்ற முதல் பதக்கமாக இது அமைந்துள்ளது.

2 மணி நேரத்திற்கு முன்
வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; வெண்கலம் வென்றார் சாஹில்  ஜாதவ்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்திய வீரர் சாஹில் ஜாதவ் ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் இந்தியா வென்ற முதல் பதக்கமாக இது அமைந்துள்ளது.

25 வயதான இந்திய வீரரான சாஹில் ஜாதவ், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் டென்மார்க்கை சேர்ந்த மார்ட்டின் டாம்ஸ்போவை 147-144 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பதக்கத்தை கைப்பற்றினார். தொடக்க செட்டில் 29-30 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்த அவர், அதன்பிறகு நடைபெற்ற அடுத்த நான்கு செட்டுகளிலும் சிறப்பாக செயல்பட்டு அபார மீள்வரவு கொடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்த ஆண்டு உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 தொடரில் இந்தியா வென்ற முதல் காம்பவுண்ட் பதக்கம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே ஷாங்காய் மைதானத்தில் இந்தியா ஐந்து காம்பவுண்ட் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், சாஹில் ஜாதவ்வின் இந்த வெண்கலப் பதக்கம் இந்திய வில்வித்தை அணிக்கு முக்கிய ஊக்கமாக அமைந்துள்ளது. இந்திய வில்வித்தை ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...