உலக சாம்பியன் குகேஷை வீழ்த்திய அரவிந்த் சிதம்பரம்: செஸ் தரவரிசையில் பெரும் சரிவு

பிராக் சர்வதேச செஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரத்திடம் தோல்வியடைந்த உலக சாம்பியன் குகேஷ், சர்வதேச தரவரிசையில் 20-வது இடத்திற்குச் பின் தள்ளப்பட்டுள்ளார்.

M

எழுதியவர்

2 மாதங்களுக்கு முன்
உலக சாம்பியன் குகேஷை வீழ்த்திய அரவிந்த் சிதம்பரம்: செஸ் தரவரிசையில் பெரும் சரிவு
குகேஷ் - அரவிந்த் சிதம்பரம்

பிராக் சர்வதேச செஸ் திருவிழாவின் (Prague International Chess Festival) ஆறாவது சுற்றில், நடப்பு சாம்பியனான அரவிந்த் சிதம்பரம், உலக சாம்பியன் குகேஷை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அரவிந்த் சிதம்பரம் கையாண்ட நேர்த்தியான உத்திகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் குகேஷ் திணறினார். இறுதியில் குகேஷை வீழ்த்தி அரவிந்த் சிதம்பரம் அபார வெற்றி பெற்றார்.

இந்தத் தோல்வியின் மூலம், மாஸ்டர்ஸ் பிரிவின் தரவரிசைப் பட்டியலில் குகேஷ் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி, நேரலை சர்வதேச தரவரிசைப் பட்டியலிலும் (Live Rating List) குகேஷ் 20-வது இடத்திற்குச் சரிந்துள்ளார். 2024 டிசம்பரில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள குகேஷ் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவிடம் டை பிரேக்கரில் தோற்றதைத் தவிர, மற்ற போட்டிகளில் குகேஷ் தொடர்ந்து சறுக்கல்களையே சந்தித்து வருகிறார். இந்த சமீபத்திய சரிவு காரணமாக, உலக சாம்பியனான குகேஷ் தனது சர்வதேச ரேட்டிங் புள்ளிகளில் சுமார் 50 புள்ளிகளை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...