இந்திய டி20 அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்த 3 மாதங்களில் அவர் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான அணியில் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். திலக் வர்மா இந்தியாவின் புதிய டி20 துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, அக்சர் சிங் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்ணோ, மொமத் சக்கரவர்த்தி, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்தீப் சிங், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் சமீபகாலமாக சுமாராக இருப்பதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இது வெளிப்படையாகவே ஒரு கடினமான முடிவு. இனி முன்னேறுவதற்கான சிறந்த வழி எது என்பதை மட்டுமே நாங்கள் பார்க்க முடியும். சூர்யகுமார் யாதவ் சொந்த ஃபார்ம் காரணமாகவும், அடுத்த உலகக்கோப்பைக்கு இன்னும் 2 வருடங்களுக்கு அதிகமான காலம் உள்ளதால் அவரை நீக்குவது சிறந்த வழி என்று நினைத்தோம்.
ஸ்ரேயாஸ் அய்யர் மிகவும் தகுதி வாய்ந்த கேப்டன் தான். நாங்கள் சூர்யகுமார் யாதவை நீக்க முடிவெடுத்தபோது நிறைய விவாதித்தோம். அவர் ஐபிஎல் தொடரில் ஆடியது காரணமா என கேட்டால் எனக்கு தெரியவில்லை. எனக்கும் அவருக்கும் இடையே உரையாடல் நடந்தது. அணியின் நலனுக்காகவே எல்லாவற்றையும் செய்கிறோம்.
சூர்யகுமார் யாதவ் தலைமையில், இந்தியா 2025 ஆசியக் கோப்பையையும், 2026 டி20 உலகக் கோப்பையையும் வென்றது. மேலும், 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஆசியக் கோப்பையை வென்ற அணிகளிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அணி விபரம் பற்றிய போட்டோவை பகிர்ந்து மிகவும் திறமையான இந்தக் குழு, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
