2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை – ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி குறித்த அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ.

1 மணி நேரத்திற்கு முன்
2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை – ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

பிசிசிஐ 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள "ஐசிசி T20 உலகக் கோப்பை 2026" தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் இந்திய அணி

அனுபவம் வாய்ந்த ஹர்மன்ப்ரீத் கௌர் ஐந்தாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பை பட்டத்திற்கு மிக அருகில் சென்று தவறவிட்ட நிலையில், இந்த முறை கோப்பையை கைப்பற்றும் உறுதியுடன் களம் இறங்குகிறது.

இங்கிலாந்து தொடர்

உலகக்கோப்பைக்கு முன்னதாக, இதே அணியுடன் இந்திய அணி இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்று இருதரப்பு டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் உலகக்கோப்பைக்கான முக்கிய முன்னேற்பாடாக கருதப்படுகிறது.

போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதிகள்

2026 மகளிர் டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள்

பிசிசிஐ அறிவித்த பட்டியலின்படி, ஹர்மன்பிரீத் கௌர் , ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, யாஷிகா பாட்டியா, நந்தினி சர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்குர், கிராந்தி கௌட், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் ஆகியோர் இந்திய மகளிர் அணியில் இடம் பெற்று உலக கோப்பைக்கான மைதானத்தில் களம் இறங்க உள்ளனர்.

சமீபத்தில் 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி சாதனை படைத்ததைத் தொடர்ந்து, இந்த டி20 உலகக்கோப்பையிலும் இந்தியா முதல் முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...