அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிமுறைகள் என்ன?
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட வேண்டும். பாடல் ஒலிக்கும்போது நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்ச்சிகளில் நடைமுறை
ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் முடிவிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் இடம்பெற வேண்டும் என வழிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷன் போன்ற அரசு ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் ஜனாதிபதி உரைகளின் ஆரம்பத்திலும் நிறைவிலும் இந்த பாடல் ஒலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
150வது ஆண்டு நினைவு கொண்டாட்டம் பின்னணி
‘வந்தே மாதரம்’ பாடல் 150வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெறும் நிலையில் இந்த புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
