நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யூஜி (NEET-UG) நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுதேர்விற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான முக்கிய நுழைவுத் தேர்வாக நீட் யூஜி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், தேர்வு தொடர்பாக முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு குறித்த புகார்கள் எழுந்ததால், தேர்வின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தேர்வை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுதேர்வு நடைபெறும் தேதி மற்றும் நடைமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
