மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' (NEET UG - 2026) நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தேர்வு மைய நகரங்கள் குறித்த அறிவிப்பைத் தேசிய தேர்வுகள் முகமை (NTA) தற்போது வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு எந்த நகரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். இது தேர்வு நடைபெறும் நகரம் குறித்த தகவல் மட்டுமே என்றும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Admit Card) விரைவில் தனியாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 3-ல் தேர்வு
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 3, 2026 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் இந்தத் தேர்வை நடத்தத் தேசிய தேர்வுகள் முகமை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரத்தைத் தெரிந்துகொள்வதன் மூலம் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட இது உதவியாக இருக்கும்.
உதவி எண்கள் அறிவிப்பு
தேர்வு மையம் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவர்கள் 011-40759000 அல்லது 011-69227700 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம். மேலும், neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
