நீட் ஹால் டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு: நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரத்திற்கு முன்
நீட் ஹால் டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு: நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று வெளியிடப்படும் என முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஹால் டிக்கெட் வெளியீடு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு தமிழகத்தில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இந்த தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் மே 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டில் தேர்வரின் பெயர், பதிவு எண், தேர்வு மையம், தேர்வு நேரம் மட்டுமின்றி தேர்வுக்கான வழிமுறைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெறும்.

மேலும் தேர்வு நாளன்று ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், தேர்வு மையங்களில் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், மாணவர்கள் முன்கூட்டியே விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...