சென்னை இன்டெக்ரால் கோச் பேக்டரி (ICF) போன்றே, தெலுங்கானாவில் புதிய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை வரும் மே 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்த புதிய தொழிற்சாலை காசிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இது நாட்டின் ரயில்வே உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் சென்னை ICFக்கு அடுத்த முக்கிய உற்பத்தி மையமாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நாளில், வாராங்கல் பகுதியில் அமைந்துள்ள நவீன ஜவுளி பூங்காவையும், பிபி நகர் பகுதியில் உள்ள AIIMS மருத்துவமனைக்கு புதிய விடுதி கட்டிடங்களும் திறந்து வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனுடன், முலுக்கு சம்மக்கா-சரளம்மா பல்கலைக்கழகத்தையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
