திமுக கூட்டணியின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற கமல்ஹாசன், பட்ஜெட் மீதான விவாதத்தில் தனது முதல் உரையை (Maiden Speech) பதிவு செய்தார். பரமக்குடி என்ற சிறிய ஊரில் தொடங்கி, அன்று பேரறிஞர் அண்ணா உரையாற்றிய அதே அவையில் இன்று நான் பேசுவது பெருமை" என நெகிழ்ந்தார். மொழிப்பற்றையும், ஆக்கிரமிப்புகளைத் துணிவுடன் எதிர்கொள்ளவும் அண்ணாதுரை கற்றுத் தந்தார். புள்ளிவிவரங்களுடன் தர்க்கரீதியாகப் பேச தந்தை பெரியார் வழிகாட்டினார். உரையில் கோபம் கலக்காமல் நாகரிகமாகப் பேச மகாத்மா காந்தி வழிகாட்டினார்.
பொருளாதார பார்வை
பள்ளியில் இடைநின்ற ஒருவன் பொருளாதாரம் பேசுவதாக எண்ண வேண்டாம் எனக் குறிப்பிட்ட அவர், பட்ஜெட் குறித்து ஒரு தமிழனாகத் தனது உரிமைக் குரலை வலுவாகப் பதிவு செய்தார்."மனதில் மையம் கொண்ட புயலில் இருந்து வரும் வார்த்தைகள் சிலருக்குக் காயத்தை ஏற்படுத்தலாம்" எனத் தனது துணிச்சலான நிலைப்பாட்டை விளக்கிய இவரது உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
