குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 16 தொழிலாளர்கள் காயம்

குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் காயமடைந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 மாதங்களுக்கு முன்
குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 16 தொழிலாளர்கள் காயம்

இந்த சம்பவம், இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில், ஜகாடியா குஜராத் இண்டஸ்ட்ரியல் டெவெலப்மென்ட் கார்பொரேஷன் (GIDC) தொழிற்பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ பாலித்தேன் எக்ஸிம் கெமிஸ்ட்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அவசர மீட்பு குழுவினரும், உள்ளூர் காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் அங்கு நிறுத்தப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அடர்ந்த கரும்புகை வெளியேறி, சுற்றுப்புறத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...