பின்லாந்து நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், அரசுமுறைப் பயணமாக இன்று (புதன்கிழமை) காலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கே.வி. சிங் அவரை நேரில் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, அதிபருக்கு முறைப்படியான ராணுவ மரியாதை (Guard of Honour) வழங்கப்பட்டது.
பின்லாந்து அதிபரின் வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "இந்தியா வருகை தந்துள்ள அதிபர் அலெக்சாண்டர் ஸ்டவரவேற்கிறேன். உங்களது இந்தப் பயணம் இந்தியா - பின்லாந்து இடையேயான உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நாளை நடைபெறவுள்ள நமது சந்திப்பையும், 'ரைசினா டயலாக் 2026' (Raisina Dialogue 2026) மாநாட்டில் நீங்கள் ஆற்றவிருக்கும் உரையையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
