டெல்லி விமான நிலையத்தில் ஸ்விஸ் ஏர் விமானத்தில் தீ விபத்து: பெரும் பாதிப்பு தவிர்ப்பு, 6 பேர் காயம்

இந்தியாவின் தலைநகர் நியூ டெல்லியில் உள்ள இந்திரா காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின், பயணிகள் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

1 மணி நேரத்திற்கு முன்
டெல்லி விமான நிலையத்தில் ஸ்விஸ் ஏர் விமானத்தில் தீ விபத்து: பெரும் பாதிப்பு தவிர்ப்பு, 6 பேர் காயம்

நேற்று, சுமார் 232 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன், சூரிச் நகரை நோக்கி புறப்பட இருந்த விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதுடன் புகை வெளியேறுவதை விமானி கவனித்தார்.

உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்திய விமானி, அவசரநிலையை அறிவித்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அவசர சேவை பிரிவுகள் செயல்படுத்தப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வெளியேறும் வாயில்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். துரிதமான நடவடிக்கையால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...