"அம்மா இறக்க வேண்டியதாயிருச்சு, மன்னிச்சிருங்க" - டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டலுக்கு பலியான தாயின் உருக்கமான கடிதம்!

உத்தரப் பிரதேசத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டலால் மனமுடைந்த பெண், தனது திருமண நாளன்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது போனில் இருந்த வீடியோ கால் மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

M

எழுதியவர்

4 மணி நேரத்திற்கு முன்
"அம்மா இறக்க வேண்டியதாயிருச்சு, மன்னிச்சிருங்க" - டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டலுக்கு பலியான தாயின் உருக்கமான கடிதம்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட தொடர் மிரட்டல்கள் மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' சித்ரவதைக்கு பயந்து குடும்பத் தலைவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது திருமண நாளுக்கு முந்தைய நாள் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் மறைத்து வைத்திருந்த உருக்கமான தற்கொலை கடிதத்தை அவரது கணவர் கண்டெடுத்தார்.

"உன் அம்மாவை அவன் சித்ரவதை செய்தான்" - கடிதத்தில் குமுறிய தாய்

அந்தக் கடிதத்தில், "அந்த நபர் உன் அம்மாவை மிகவும் துன்புறுத்திவிட்டான்" என்று தனது குழந்தைகளிடம் கூறுவது போலவும், 'டிஜிட்டல் அரெஸ்ட்' மூலம் தான் அனுபவித்த கொடுமைகளையும் அவர் விவரித்துள்ளார். மிரட்டிய நபரின் பெயரைத் குறிப்பிடாத அவர், "ஒவ்வொரு பிறவியிலும் உங்களைப் போன்ற ஒரு குடும்பம் எனக்குக் கிடைக்க வேண்டும்; குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், அம்மா இறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது, மன்னித்துவிடுங்கள்" என கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்தபோது வந்த சில மர்ம அழைப்புகளுக்குத் திரும்ப அழைத்தபோது, ஒரு நபர் வீடியோ காலில் தோன்றி குடும்பத்தினரையே மிரட்டியதாகத் தெரிகிறது.

(தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

டிஜிட்டல் கைது போன்ற அச்சுறுத்தலுக்கு 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகார் அளிக்கவும்.)

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...