ஏப்ரல் 2026-ல் திறக்கப்பட்ட இந்த அதிநவீன நிலையத்தில் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ரயில்கள் வடிவமைக்கப்படும்.
இந்த புல்லட் ரயில், மும்பை – அகமதாபாத் அதிவேக பாதையில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் புல்லட் ரயில் இதுவாகும்.
பெங்களூரு ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் இந்த ரயில்கள் தயாரிக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலக தரத்திற்கான ரயில் பெட்டிகளை இந்தியாவில் உருவாக்கும் இந்த முயற்சி, ரயில்வே துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
