ஆந்திர மாநிலம் பொப்பிலி பகுதியைச் சேர்ந்த சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணா (26) என்பவர், அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். சிறுவயது முதலே சிறந்த நீச்சல் வீரரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் கலிபோர்னியாவில் உள்ள மெராமெக் பூங்காவிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஸ்ரீஹரிகிருஷ்ணா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் சுமார் 15 நிமிட தேடுதலுக்குப் பிறகு அவரது உடலை மீட்டனர். கடந்த டிசம்பர் மாதம் தான் கடின முயற்சிக்குப் பின் அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளிலேயே மகனைப் பறிகொடுத்த பெற்றோரின் கதறல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
