சந்திராயன்–5 திட்டம்: ஜப்பானில் முன்னெற்பாடுகள் தீவிரம்

சந்திராயன்–5 நிலா ஆய்வு திட்டத்திற்கான முன்னெற்பாடுகள் ஜப்பானில் வேகமெடுத்து வருகின்றன.

4 மணி நேரத்திற்கு முன்
சந்திராயன்–5 திட்டம்: ஜப்பானில் முன்னெற்பாடுகள் தீவிரம்

இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ஜப்பானின் ஜப்பான் ஏரோஸ்பைஸ் எஸ்பலோரேஷன் ஏஜென்சி (ஜாக்ஸா) இணைந்து செயல்படுத்தும் சந்திராயன்–5 (LUPEX) நிலா ஆய்வு திட்டத்திற்கான முன்னெற்பாடுகள் வேகமெடுத்து வருகின்றன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜப்பானில் உள்ள தானேகாஷிமா விண்வெளி மையத்திற்கு சென்று, ஏவுதள வசதிகள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இத்திட்டம் 2028 ஆம் ஆண்டு ஜப்பானின் H3 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள நீர்பனிக்கட்டிகளை ஆராய்வதே இந்த கூட்டு முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இதில், இஸ்ரோ தயாரிக்கும் லேண்டர் மற்றும் ஜாக்ஸா உருவாக்கும் சுமார் 350 கிலோ எடையுள்ள ரோவர் அனுப்பப்பட உள்ளது. லேண்டர், ரோவரை பாதுகாப்பாக நிலவின் மேற்பரப்பில் இறக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கிய பிறகு, ஜப்பானிய ரோவர் சுமார் 5 அடி ஆழம் வரை நிலத்தை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும். பனிக்கட்டி மற்றும் பிற கனிமங்களின் இருப்பை கண்டறிய சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பயணம் குறைந்தது 3½ மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுதளத்தில் லேண்டர் மற்றும் ரோவர் ஒருங்கிணைப்பு, சோதனைகள் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டு நிலா ஆய்வு பயணம் உலக விண்வெளி ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...