மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இக்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 152 தொகுதிகளில் 93.19% என்ற உயர்ந்த வாக்கு பதிவு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் மீது அரசியல் வட்டாரங்களின் கவனம் திரும்பியுள்ளது.
இந்த கட்டத்தில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள் மற்றும் 792 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 4.12 லட்சத்துக்கும் அதிகமான இளம் வாக்காளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
வாக்குப்பதிவு சீராக நடைபெறுவதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதுவரை இல்லாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய ஆயுத காவல் படையினர் சுமார் 2.30 லட்சம் பேர் மற்றும் மாநில காவல்துறையினர் 38,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிக வாக்கு பதிவு நிகழுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
