CM Vijay | அஷ்டமியில் முதலமைச்சராகும் ஜோசப் விஜய்.. ஆன்மிக ரீதியில் என்ன நடக்கும் தெரியுமா?

விஜய் பதவியேற்பு தேய்பிறை அஷ்டமியில் நிகழ்வது நிச்சயம் தடைகளை தாண்டி ஐந்தாண்டுகள் நல்லாட்சி செய்வார் என தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் நம்பிக்கை

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
CM Vijay | அஷ்டமியில் முதலமைச்சராகும் ஜோசப் விஜய்.. ஆன்மிக ரீதியில் என்ன நடக்கும் தெரியுமா?

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மே 10ம் தேதி காலை 10 மணிக்கு பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாள் எப்படிப்பட்டது என்பது பற்றி காணலாம்.

ஒரு வழியாக முடிவுக்கு வந்த விஜய் பிரச்னை

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது. இதில் ஐந்து எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், தலா இரண்டு எம்எல்ஏக்களை கொண்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை வெளியில் இருந்து விஜய்க்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் வழங்கினார். கிட்டதட்ட 4 நாட்களாக அவர் ஆளுநரை சந்தித்த நிலையில் இன்று பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஜோசப் விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரசியலமைப்பு சட்டப்படி நியமிப்பதாக ஆளுநர் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் மே 10ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது

மே 10ம் தேதி நாள் எப்படி?

மே 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சித்திரை 27ஆம் தேதி ஆகும். இந்த நாள் தேய்பிறை அஷ்டமியாக உள்ளது. விஜயின் ராசி கடகம் என்பதால் அன்றைய நாளில் தெளிவு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணி என்பது நல்ல நேரத்திற்கும் கௌரி நல்ல நேரத்திற்கும் இடைப்பட்ட காலமாக உள்ளது. அந்த நேரத்தில் ராகு, குளிகை, எமகண்டம் என எதுவும் இல்லாததால் நல்ல நேரமாகவே கருதப்படுகிறத

பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக நம்பிக்கை படியும் அஷ்டமி என்பது எந்த வித நல்ல காரியங்களும் செய்யக்கூடிய நாள் இல்லை என கருதப்படுகிறது. அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாம் நாள் அஷ்டமியாக கணக்கிடப்படுகிறது. ஆனால் தேய்பிறை அஷ்டமி என்பதால் இந்நாளில் பைரவர் வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் இந்நாளில் நாம் இறைவனை வழிபடுவதன் மூலம் எதிரிகள் பயம் மற்றும் நம் முன் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி மனநிம்மதியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்குள் ஏகப்பட்ட சிக்கல்களை விஜய் சந்தித்தார். இந்த நிலையில் அவரது பதவியேற்பு தேய்பிறை அஷ்டமியில் நிகழ்வது நிச்சயம் தடைகளை தாண்டி ஐந்தாண்டுகள் நல்லாட்சி செய்வார் என தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...