Vijay Thirumavalavan | விஜய்க்கு ஆதரவு கொடுப்பதில் என்ன பிரச்னை?.. திருமா மீது விசிக தொண்டர்கள் கோபம்!

நாளைக்குள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாமா வேண்டாமா என்பதை திருமாவளவன் அறிவிக்க உள்ளார்.

G

எழுதியவர்

1 நாட்களுக்கு முன்
Vijay Thirumavalavan | விஜய்க்கு ஆதரவு கொடுப்பதில் என்ன பிரச்னை?.. திருமா மீது விசிக தொண்டர்கள் கோபம்!

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்ட தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு கொடுக்க யோசிக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் டென்ஷனாகியுள்ளனர்.

அழைக்கும் விஜய்.. தயங்கும் திருமாவளவன்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகவும், அதிமுக மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் ஆட்சியமைக்க அழைக்குமாறு விஜய் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் இல்லை என இரண்டு முறை விஜய் சந்தித்தும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இது தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

விஜய்க்கு இன்னும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 5 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து கை கொடுத்துள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளிலும் தலா இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த மூன்று கட்சியையும் தங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இதுவரை மூன்று கட்சியும் எந்த பதிலும் சொல்லவில்லை. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அமைதி காப்பது கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

அதிகாரத்தில் இருந்தால் இலக்கை அடைய முடியும்.

தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு அங்கம் வகித்ததில்லை. ஆனால் விஜய் யாரும் கேட்காமலேயே ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற தயாராக உள்ளார். தனக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து ஒரு கட்சியின் கூட்டணியில் பத்தில் ஒருவராக அங்கம் வகிப்பதற்கு பதிலாக, அதிகாரத்தில் அமர்ந்து நம்முடைய இலக்கை நோக்கி பயணிப்பது இன்னும் எளிதாக இருக்கும் என்பது தொண்டர்களின் குமுறலாக உள்ளது. ஏற்கனவே இந்த தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தலித் மக்களின் வாக்கு வங்கியை நம்பி இருக்கும் திருமாவளவனுக்கு அந்த சமுதாய மக்களை இம்முறை விஜய் பக்கம் தங்கள் ரூட்டை திருப்பியது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். காரணம் தலித் மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் தொடர்ந்து போராடும் அரசியல் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுருங்கி போய் வெளியேவும் செல்ல முடியாமல் உள்ளேயும் எதுவும் பேசவும் முடியாமல் அமைதி காத்து வருவது பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை.

கள நிலவரத்தை முன்கூட்டியே கணித்தார்

இந்த நிலையில் தான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் கூட்டணிக்கு வாருங்கள் என திருமாவளவனுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வருவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் திமுக கூட்டணியில் தொடர்வதாக தடாலடியாக அறிவித்தார்.

அதேசமயம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் முதலில் போட்டியிடுவதாக சொல்லிவிட்டு பின் அங்கிருந்து வாபஸ் பெற்றார். 2026 இல் தமிழக அரசியல் களம் மாறப்போகிறது என்பதை திருமாவளவன் முன்கூட்டியே கணித்திருந்தார். மேலும் நாடாளுமன்றம் உறுப்பினராக இருப்பதை காட்டிலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் நிச்சயம் இந்த தேர்தலில் நம்மால் ஒரு மாற்றம் நிகழும் என அவர் கணக்கிட்டு இருந்தார்.

ஆனால் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் தேர்தலில் நிற்காமல் பின்வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவது அந்த இரண்டு இடங்களில் தான் உள்ளது. இப்படி இருக்கும் கால சூழலை தனக்கு ஏற்றார் போல் ஏன் திருமாவளவன் பயன்படுத்த மறுக்கிறார் என்பது புரியாத புதிராக தான் உள்ளது.

2014ல் பாஜகவுடன் கூட்டணி வைத்த தேமுதிகவுடன் தான் 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் திருமாவளவன் இணைந்தார். ஆனால் விஜய்யை பாஜக இயக்குகிறது என தொடர்ந்து சொல்லி அந்தக் கட்சிக்கு ஆதரவு மட்டுமல்ல கூட்டணிக்கு கூட செல்ல மறுப்பது தொண்டர்களிடையே பரிதவிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் திருமாவளவன் நல்ல முடிவு எடுத்து விஜயுடன் இணையும் பட்சத்தில் வரும் காலத்தில் நிச்சயம் அரசியலில் மட்டுமல்லாமல் சமூகத்தில் நல்ல நிலையை தலித் சமுதாய மக்கள் அடைவார்கள் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.

நாளைக்குள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாமா வேண்டாமா என்பதை திருமாவளவன் அறிவிக்க உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் நல்லதே நடக்கும் என நம்பிக்கையுடன் தொண்டர்களும் காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...