தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களம் இன்று சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், வெங்கட்ரமணன் மயிலாப்பூர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் களம் இறங்குவதாக அறிவித்தார். மேலும், கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன், திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன் மற்றும் குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரு தொகுதிகளில் களம் காணும் விஜய்: தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜய்!
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது.
1 வாரங்களுக்கு முன்

உங்கள் கருத்து
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...
இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: