TVK Vijay Vs DMK Stalin | தவெக ஆட்சி கவிழும்.. ஸ்டாலின் கொடுக்கும் வார்னிங்.. விஜய் பிளான் என்ன?

விஜய் மீதான ஒரு ஈர்ப்பு தமிழக மக்களிடையே திமுக, அதிமுக மீது மேலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்த அதிருப்தி தான் தங்களுக்கான ஆதரவு என்பதை தவெக பலமாக நம்புகிறது. ஆட்சி கவிழ்ப்பு வந்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதை விஜய் தீர்க்கமாக நம்புகிறார்.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
TVK Vijay Vs DMK Stalin | தவெக ஆட்சி கவிழும்.. ஸ்டாலின் கொடுக்கும் வார்னிங்.. விஜய் பிளான் என்ன?

கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டில் அமையப்பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு நானே பொறுப்பு - மு.க.ஸ்டாலின்

2026 தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று பிற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ளது. கடந்த மே 10ம் தேதி விஜய் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தன. அதிமுக 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றாலும் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், செயலாளர் துரை முருகன் ஆகியோர் தோல்வியடைந்தது மோசமான வரலாறாக மாறியது.

இப்படியான நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த தேர்தல் தோல்விக்கு யாரையும் காரணம் காட்ட விரும்பவில்லை. நானே தோல்விக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார். கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகத்தையும் மாற்றியமைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக உடன்பிறப்பின் குரல் என்ற வலைத்தளத்தையும் திமுக தொடங்கியுள்ளது. இதன்மூலம் தேர்தல் தோல்விக்கு காரணம், கட்சியைப் பலப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கலாம் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சி கவிழும் - ரெடியா இருங்க

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் தற்போது உள்ள அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். 2029 நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாட்டிற்கும் தேர்தல் வரலாம். அதனால் ரெடியா இருங்க என மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு முறை அதாவது 1976 மற்றும் 1991ம் ஆண்டு என இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த இரண்டு முறையும் திமுக தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது.

அதேபோல் 1980ம் ஆண்டு எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு உடனடியாக தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக வெற்றி பெற்றது.

இத்தகைய சூழலில் இதுவரை ஆட்சி கவிழ்ப்பு என்பது நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுக, அதிமுக என்னும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தவெக ஆட்சியில் அமர்ந்தது. விஜயை முதலமைச்சராக அமரவிடாமல் செய்வதற்காக பரம எதிரிகளாக இருந்த திமுக - அதிமுக கூட்டணி அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேசமயம் விஜய் பெரும்பான்மை இல்லாத சூழலில் தான் வெற்றி பெற்றார். அப்படியிருக்கும்போது ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள் விலகினால் நிச்சயம் ஆட்சி கலையும் சூழல் உள்ளது. ஆனால் அது விலகும் கட்சிகளுக்கு மிகப்பெரிய பேரிடியாக அடுத்த தேர்தலில் அமையும் என்பதே கள நிலவரமாக உள்ளது.

அமைதியாக இருந்து காரியம் சாதிக்கும் விஜய்

காரணம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நாளில் இருந்து விஜய் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. உச்சக்கட்டமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக பரப்பப்பட்டது. கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோதும் விஜய் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதும் விஜய் தரப்பு எவ்வித ரியாக்‌ஷனும் காட்டவில்லை. மக்களுக்கு எது சரி என தெரியும். அவர்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தது.

இந்த நிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதற்கும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அரசியல் களத்தில் அழுத்தம், நெருக்கடி எல்லாம் சாதாரணமானது என்றாலும் அது யாருக்கு என்பதில் தான் விஷயமே உள்ளது. விஜய் மீதான ஒரு ஈர்ப்பு தமிழக மக்களிடையே திமுக, அதிமுக மீது மேலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்த அதிருப்தி தான் தங்களுக்கான ஆதரவு என்பதை தவெக பலமாக நம்புகிறது. ஆட்சி கவிழ்ப்பு வந்தாலும், இடைத்தேர்தல் வைத்தாலும், இன்னொரு தேர்தல் வைத்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதை விஜய் தீர்க்கமாக நம்புகிறார். அதனால் தான் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி பிரேமலதா வரை பலரும் ஆட்சிக்கு வந்த ஓரிரு நாட்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் செயல் மூலம் அதனை எல்லாம் தவிடுபொடியாக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...