Vijay Vs DMK | விஜயுடன் இணைய திட்டம் .. தேர்தலுக்கு முன்பே திமுகவுக்கு ஸ்கெட்ச்.. காங்கிரஸ் செய்த ஷாக் சம்பவம்!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி டீமுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
Vijay Vs DMK | விஜயுடன் இணைய திட்டம் .. தேர்தலுக்கு முன்பே திமுகவுக்கு ஸ்கெட்ச்.. காங்கிரஸ் செய்த ஷாக் சம்பவம்!

திமுக கூட்டணியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி பிரிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பே சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவு கேட்ட தமிழக வெற்றிக் கழகம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிதாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளார். இதில் முதல் கட்சியாக காங்கிரஸ் விஜய்க்கு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், என அனைத்திலும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி திடீரென அதனை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ளது திமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் தாங்கள் எதிர்க்கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதால் திமுக எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறது. ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் மீது முன் வைத்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பே பல உள்ளடி வேலைகள்

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியானது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஒருபுறம் சென்று கொண்டிருந்தது. ஆனால் தேர்தலில் வெல்ல தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என திமுக விரும்பியது. இதனால் சோனியா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரை வைத்து ராகுல் காந்திக்கு அழுத்தம் கொடுத்து திமுக கூட்டணியில் தொடர வைக்கப்பட்டது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 40 இடங்கள் வேண்டும் என்ற காங்கிரஸ் வைத்த கோரிக்கைகளை நிராகரித்த திமுக 28 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கி சமாதானப்படுத்தியது. திமுகவின் இந்த ஒப்பந்தத்தில் ராகுல்காந்தி உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானோருக்கு உடன்பாடு இல்லை.

இருந்தாலும் கட்சி தலைமையின் உத்தரவை மீறக்கூடாது என்பதால் தேர்தலில் அமைதியாக வேலை செய்தனர். சில இடங்களில் அதுவும் நடக்கவில்லை. விளைவு இந்த தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் திமுக கூட்டணியும் 73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி மீதும் இந்த தேர்தலில் பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது அக்கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் கோடிக்கணக்கில் தேர்தலில் சீட் வழங்குவதற்கு பணம் பேரம் பேசப்பட்டதாக தொடங்கி தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி டீமுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர் கடந்த டிசம்பர் மாதமே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் பங்கு தருவதாக கூறி எங்களை அழைத்தது. ஆனால் சிலர் அதனை தடுத்து விட்டனர். எப்போது வாக்களிப்பு நடத்தினாலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் சேருவதை பலரும் விரும்புவது தெரியவரும். தமிழக காங்கிரஸின் உள்ள தலைவர்களின் சூழ்ச்சியால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். என்னை பொறுப்பிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை.காங்கிரஸ் தொண்டர்களின் உரிமைக் குரலை நான் உரக்கச் சொல்வேன்.

மேலும் தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து பணியாற்றியது உண்மை தான். அதில் எந்த தவறும் இல்லை. மக்கள் உண்மையின் பக்கம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் கால் வைக்க கூடாது என்ற தெளிவான பார்வை இருக்கிறது. மேலும் ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர், கிரீஸ் சோடங்கர் ஆகியோருக்கு கள நிலவரம் தெரியும். மக்கள் நீதி நிறைந்த நிலையான மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...