DMK Alliance Supports Vijay | விஜய் பக்கம் சாயும் திமுக கூட்டணி தலைவர்கள்.. உச்சக்கட்ட டென்ஷனில் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளின் தலைவர்கள் விஜய் பற்றி மறைமுகமாக பேசிவருவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
DMK Alliance Supports Vijay | விஜய் பக்கம் சாயும் திமுக கூட்டணி தலைவர்கள்.. உச்சக்கட்ட டென்ஷனில் மு.க.ஸ்டாலின்

தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் நிலையில் திமுக கூட்டணி தலைவர்கள் திடீரென தவெக தலைவர் விஜயின் தாக்கம் பற்றி பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் மாற்றத்தை உண்டாக்கும் தவெக

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85.10% வாக்குகள் பதிவானது அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.

இதில் தேர்தலுக்கு முன்பும், பின்பும் கள நிலவரத்தை மாற்றக்கூடிய சக்தியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி திகழ்கிறது என்பதை கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளது. முன்பை விட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கூட்டணி கட்சிகளை நம்பியிருக்கும் திமுகவுக்கு கருத்து கணிப்பு முடிவுகள் சற்று அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் பெறும் வாக்குகள் தான் திமுக, அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தீர்மானிக்கும் என சொல்லப்படுகிறது.

விஜயை பற்றி பேசும் திமுக கூட்டணி தலைவர்கள்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே திமுக கூட்டணி கட்சிகள் விஜய் தாக்கம் பற்றி பேசி வருவது பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு வலுவான சக்தியாக திகழும். தேர்தல் முடிவுகள் ஆச்சரியங்களை அளிக்கக்கூடும். மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவான அலை இருக்கும்” என ஒப்புக்கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “கருத்துக்கணிப்பில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதை திமுக தவறவிட்டு விட்டது. பாஜக தமிழ்நாட்டில் வந்துவிடக்கூடாது என்பதால் திமுக கூட்டணியில் இணைந்தோம். இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இளைஞர்கள் மத்தியில் இந்த தேர்தலில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மாற்றம் தேவை என்பது நோக்கமாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் திமுக கூட்டணி தான் பெரும் வெற்றி பெறும். விஜய் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளையும் பின்னுக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கான வலிமையை பெறவில்லை. அவர் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை’ என கூறியுள்ளார். அதேசமயம் ஒரு சில இடங்களில் கூட்டணி கட்சியினருக்கு விசிகவினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே தவெகவுடன் ஒரு மறைமுக தொடர்பு இருப்பது பல நிகழ்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிருப்தியில் மு.க.ஸ்டாலின்

இப்படியாக தொடர்ச்சியாக திமுக கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளின் தலைவர்கள் விஜய் பற்றி மறைமுகமாக பேசிவருவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதன்மூலம் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...