Vijay Oath Ceremony | விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையா? - உண்மை இதுதான்!

விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம், அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது இணையத்தில் பேசு பொருளாக மாறியது. விஜய் பதவியேற்ற முதல் நாளே மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கி விட்டார் என விமர்சனங்கள் எழுந்தது.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
Vijay Oath Ceremony | விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையா? - உண்மை இதுதான்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு இடத்தில் ஒலிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

ஏற்கனவே தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தான் பங்கிருக்கும் நிகழ்ச்சிகளில் முதலில் தேசிய கீதமும் அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் ஒளிபரப்ப வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதைய திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆளுநர் பங்கேற்ற சட்டப்பேரவை நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் ஒலிக்கப்பட அவர் வெளியேறிய காட்சிகளும் அரங்கேறியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தான் முதலில் இசைக்கப்பட வேண்டும் என்பதில் அப்போதைய முந்தைய திமுக அரசு உறுதியாக இருந்தது.

இந்த நிலையில் விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம், அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது இணையத்தில் பேசு பொருளாக மாறியது. விஜய் பதவியேற்ற முதல் நாளே மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கி விட்டார் என விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் உண்மையில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா என்பது முழுக்க முழுக்க ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்யும் நிகழ்வாகும். அங்குள்ள நிகழ்ச்சி நிரல்படி வந்தே மாதரம், தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கூட முதலில் தேசிய கீதம் தான் இசைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் வெளியிட்டு விஜய் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...