தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஆட்சி அமைப்பது யார் என்ற பெரும் குழப்பம் மற்றும் சிக்கல் நிதித்து வருகிறது. இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கப் போவதாக கூறப்படுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் இதன் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தடுமாறும் தமிழக வெற்றிக் கழகம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் புதிதாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் விஜய்க்கு 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. இதற்காக திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் உதவியை விஜய் நாடினார். இதில் காங்கிரஸ் கட்சி ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அதேசமயம் விடுதலை சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை சொல்லாமல் அமைதி காத்து வருகிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு
இதனிடையே தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இரண்டு முறை விஜய் சந்தித்து பேசி ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் விஜய் கூட்டணி ஆட்சி என விஜய் தெரிவித்ததால் பெரும்பான்மைக்கான எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்க வேண்டும் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. விஜய்க்கு இன்னும் ஆறு எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக ஆட்சியைப் பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது
விஜய்க்கு எதிராக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது யார் என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில், எதிர்க்கட்சியாக மாறியுள்ள திமுகவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அவரது மகனான முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் இதில் உதயநிதி ஸ்டாலின் தேர்வு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் திமுகவின் அடுத்த கட்ட தலைமை பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் அடியெடுத்து வைக்க உள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் உதயநிதி vs விஜய் என்ற களம் உருவாகும் என்பதை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இவ்வளவு சீக்கிரத்தில் உருவாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. பரம எதிரிகளாக கருதப்படும் திமுக மற்றும் அதிமுக எப்படி இந்த விஷயத்தில் ஒன்று சேரும் என்பதே சாமானிய மக்களின் கேள்வியாகவும் எழுந்தது. இப்படியான ஒரு கூற்றை யார் கிளப்பிவிட்டது என தெரியாமல் உள்ளூர் ஊடகம் தொடங்கி தேசிய ஊடகம் வரை விவாதம் நடத்தியது. ஆனால் விஜய்யை வீழ்த்துவதற்கு உதயநிதி ஸ்மார்ட்டான முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் விஜய் முதலமைச்சராக விடாமல் தடுப்பதில் உதயநிதி மிகப்பெரிய விஷயத்தை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதாவது விஜய் ஒருவேளை முதலமைச்சராக பதவி அளித்தால் நிச்சயம் அவர் நீண்ட காலத்திற்கு முதலமைச்சராகவும் வாய்ப்பு உருவாக்கி விடும். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியை போல் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் பக்கம் சென்று விட்டால் திமுகவுக்கு ஆதரவு கிடைப்பதில் சிக்கல் எழும். இதனால் தனது அரசியல் வாழ்க்கை என்னாகும் என்ற கேள்வி உதயநிதிக்கு முன் உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் திமுக ஒரு தெளிவான முடிவை எடுக்கவில்லை. அதாவது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைப்பதை தடுக்க போவதில்லை. அடுத்த ஆறு மாதங்கள் தொந்தரவு செய்யாமல் பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவிக்கிறார். அதேசமயம் திமுகவின் எம்பி கலாநிதி வீராசாமி திமுக எதிர்கட்சியாகவே செயல்படும் எனவும் கூறுகிறார். திமுகவின் செய்தி தொடர்பாளர்கள் விஜய் விவகாரத்தில் ஆளுநர் எடுத்த முடிவு சரி என்பது போல் பேசுகிறார்கள். ஆக மொத்தத்தில் அமைதியாக இருந்து திமுக தனது வேலையை காட்டி வருவதாக அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படியான நிலையில்தான் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து விஜய்க்கு எதிராக களமிறங்க உள்ளதாக தகவலும் பரவத் தொடங்கியது. இதன் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதன்மூலம் கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்று இல்லாமல் உதயநிதி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இரண்டாக அவருக்கு திருப்பி கிடைக்கும் என்ற நிலையில் அரசியல் களம் உள்ளதால் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
