தவெக, திமுக முதல் வெற்றிகள்: முக்கிய தொகுதிகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல முக்கிய தொகுதிகளில் முதல் வெற்றிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2 மணி நேரத்திற்கு முன்
தவெக, திமுக முதல் வெற்றிகள்: முக்கிய தொகுதிகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தூத்துக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீகாந்த் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் திமுகவின் கே.என். நேரு சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தத் தேர்தலில் திமுகவுக்கான முதல் வெற்றியை பெற்றுத்தந்தார்.

மேலும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் அண்ணாநகர் தொகுதியில் த. வெ. க. வேட்பாளர் வி. கே. ராம் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை தெற்கு தொகுதியில் தவெகவை சேர்ந்த கோபிசன் 17,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தஞ்சை, தாம்பரம் உள்ளிட்ட தொகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்று வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது.

இந்த அனைத்து வெற்றிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...