தமிழக சட்டமன்ற தேர்தல்: த.வெ.க தலைவர் விஜய்  வாக்களிப்பு – வாக்குச்சாவடியில் உற்சாகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

1 மாதங்களுக்கு முன்
தமிழக சட்டமன்ற தேர்தல்: த.வெ.க தலைவர் விஜய்  வாக்களிப்பு – வாக்குச்சாவடியில் உற்சாகம்

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ஜனநாயக கடமையை நிறைவேற்றும் நோக்கில் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் திரண்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையத்தினால் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக வெற்றி கழக (த.வெ.க) தலைவர் விஜய், தனது கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக வாக்களித்தார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காலை நேரத்தில் வந்த அவர், தனது வாக்கினை பதிவு செய்தார்.

விஜய் வாக்களிக்க வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வாக்குச்சாவடி முன்பு திரண்டனர். அவரை நேரில் காண உற்சாகக் கோஷங்கள் எழுப்பியதால், அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு மாலை வரை நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்காளர்கள் பங்கேற்று வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...