தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: மாலை 6 மணி வரை நீட்டிப்பு – டோக்கன் முறையில் அனைவருக்கும் வாய்ப்பு-தேர்தல் ஆணையம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

1 மாதங்களுக்கு முன்
தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: மாலை 6 மணி வரை நீட்டிப்பு – டோக்கன் முறையில் அனைவருக்கும் வாய்ப்பு-தேர்தல் ஆணையம்

இது முந்தைய சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது அதிகமான வாக்குப்பதிவாக பார்க்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னையைத் தொடர்ந்து பிற பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் பலர் நேற்று நள்ளிரவு பயணம் மேற்கொண்டு இன்று காலை 10 முதல் 11 மணி அளவில் தான் தங்கள் பகுதிகளை சென்றடைந்துள்ளனர். அவர்களும் மாலை நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வரிசைப்படி தங்கள் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்படும். கடைசி வாக்காளர் இரவு நேரமாக இருந்தாலும் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வந்துள்ள வாக்காளர்களும் பிற்பகல் நேரத்தில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...