திருவான்மியூரில் முதல் வாக்காளராக நடிகர் அஜித்குமார் வருகை – பாதுகாப்பு மத்தியிலும் உற்சாகம்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் அஜித் குமார் முன்கூட்டியே வந்து காத்திருந்தார்

1 மாதங்களுக்கு முன்
திருவான்மியூரில் முதல் வாக்காளராக நடிகர் அஜித்குமார் வருகை – பாதுகாப்பு மத்தியிலும் உற்சாகம்

முதல் வாக்காளராக தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் நோக்கில் அவர் காலை முதலாக வாக்குச்சாவடியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு தொடங்க சுமார் 10 நிமிடங்களுக்கு முன், வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நடிகர் நுழைந்தார். வெள்ளை நிற உடையில் வந்திருந்த அவரை சுற்றி ரசிகர்கள் திரண்டதால், சிறிது நேரம் தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, அதிகாலை 6 மணி முதலே திருவான்மியூரில் உள்ள பாரதா பள்ளி அருகே ரசிகர்கள் திரளத் தொடங்கினர். பாதுகாப்பு காரணங்களால், வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் சுற்றளவில் பொதுமக்கள் கூடகூடாதென காவல்துறையினர் முன்கூட்டியே அறிவுறுத்தியிருந்தனர். இருந்தாலும் ரசிகர்கள் கூடுவதை தொடர்ந்து, அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டன.

நடிகர் அஜித் குமார் வழக்கமாகவே வாக்குப்பதிவு நாளில் அதிகாலை நேரத்திலேயே வந்து தனது வாக்கை பதிவு செய்வது வழக்கம். கூட்டநெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அவர் இதனை கடைப்பிடித்து வருகிறார்.

இந்நிலையில், வாக்குச்சாவடியில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், நடிகர் அஜித் முதன்மையான வாக்காளராக தனது வாக்கை பதிவு செய்து உள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...