பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கின்றன. குறிப்பாக, AGNI நிறுவனம் திமுக 169 இடங்களை வெல்லும் எனக் கணித்துள்ளது. Chanakya (145-160 இடங்கள்) மற்றும் Minnambalam (155 இடங்கள்) போன்ற நிறுவனங்களும் திமுகவின் வெற்றியை உறுதிபடத் தெரிவித்துள்ளன.
சவால் அளிக்கும் அதிமுக கூட்டணி
அதிமுக தலைமையிலான கூட்டணிக்குச் சில நிறுவனங்கள் வலுவான இடங்களைக் கணித்துள்ளன. Times Now நிறுவனம் மட்டும் அதிரடியாக அதிமுக 128 - 147 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளது. அதேபோல், Vote Vibe நிறுவனம் அதிமுக 114 - 124 இடங்களைப் பெற்று திமுகவுடன் (103 - 113) கடும் போட்டியில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
கவனம் ஈர்க்கும் தவெக மற்றும் நாம் தமிழர்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது முதல் தேர்தலிலேயே கணிசமான இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிகிறது. NDTV People Pulse 18 - 24 இடங்களையும், P- Market 16 - 26 இடங்களையும் தவெக-விற்கு வழங்கியுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு (NTK) Chanakya 5 - 8 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
NDTV People Pulse திமுக+: 125 - 145 | அதிமுக+: 65-80 | தவெக: 18 -24 | நாதக: 0-2
CHANAKYA திமுக+: 145 - 160 | அதிமுக+: 50 - 65 | தவெக: 13 - 18 | நாதக: 5 - 8
MATRIZE திமுக+: 122 - 132 | அதிமுக+: 87 - 100 | தவெக: 10 - 12 | நாதக: 0 - 6
AGNI திமுக+: 169 | அதிமுக+: 64 | தவெக: 01 | நாதக: 00
MINNAMBALAM திமுக+: 155 | அதிமுக+: 72 | தவெக: 05 | நாதக: 00
VOTE VIBE திமுக+: 103 - 113 | அதிமுக+: 114 - 124 | தவெக: 04 - 10 | நாதக: 00
P- Market திமுக+: 124 - 145 | அதிமுக+: 65 - 85 | தவெக: 16 - 26 | நாதக: 1 - 6
CNN திமுக+: 103 - 113 | அதிமுக+: 114 - 124 | தவெக: 04-10 | நாதக: 00
AXIS MY INDIA திமுக+: 92 - 110 | அதிமுக+: 22-32 | தவெக: 98 - 120 | நாதக: 00
VIKATAN திமுக+: 121 | அதிமுக+: 83 | தவெக: 03 | இழுபறி - 27
LOK POLL திமுக+: 181-189 | அதிமுக+: 38-42 | தவெக: 08-10 | நாதக:- 0
