MK Stalin | சேகர்பாபு போட்ட ஸ்கெட்ச்.. வீழ்ந்த மு.க.ஸ்டாலின்.. கொளத்தூரில் நடந்த சம்பவம்! | Sekar Babu

சேகர்பாபுவின் அரசியலின் அட்ராசிட்டிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
MK Stalin | சேகர்பாபு போட்ட ஸ்கெட்ச்.. வீழ்ந்த மு.க.ஸ்டாலின்.. கொளத்தூரில் நடந்த சம்பவம்! | Sekar Babu

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தான் காரணம் என திமுக தொண்டர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

சரிவை சந்தித்த திமுக

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (மே 4) வெளியானது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேசமயம் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தக்கட்ட நகர்வை ஒட்டுமொத்த அரசியல் களம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மு.க.ஸ்டாலினின் தோல்வியால் அதிர்ச்சி

திமுக, அதிமுக தோற்றதை விட மிகப்பெரிய அதிர்ச்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வி தான். அவர் கொளத்தூரில் கடந்த 2011, 2016,2021 ஆகிய 3 தேர்தல்களிலும் வென்றிருந்தார். கொளத்தூரில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அவரை 2026 தேர்தலில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 8,875 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். ஸ்டாலின் தோல்வியை யாருமே எதிர்பார்க்கவில்லை. கொளத்தூர் தொகுதிக்கு இவ்வளவு திட்டங்கள் செய்தும் அந்த பகுதி மக்கள் நன்றி மறந்து அவரை தோற்கடித்து விட்டதாக இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சேகர்பாபு தான் காரணம்

ஒருபக்கம் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கான காரணம் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் மு.க.ஸ்டாலின் தோல்வி பற்றிய பேச்சும் எழுந்துள்ளது. குறிப்பாக தேர்தல் முடிவுக்குப் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின், பின் அங்கிருந்து கிளம்பும்போது தொண்டர்களின் முகம் பொலிவற்று இருந்ததைக் கண்டு கண் கலங்கினார். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

அதேசமயம் மு.க.ஸ்டாலினின் இந்த மோசமான தோல்விக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தான் காரணம் என திமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். கொளத்தூர் தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளராக அவர் தான் இருந்தார். தொகுதிக்குள் என்ன நடக்கிறது, மக்களின் மனநிலை என்ன என்பதை சேகர்பாபு கவனிக்காமல் விட்டாரா அல்லது கண்டுக்கொள்ளாமல் இருந்தாரா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக திமுக செய்தித் தொடர்பாளரும், கடந்த திமுக ஆட்சியில் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் எக்ஸ் வலைத்தளத்தில் நேரடியாக சேகர்பாபுவை குறிப்பிட்டு தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா? என கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு எழுப்பப்பட்டுள்ளது.

சேகர்பாபுவின் மேல் தொடரும் புகார்கள்

மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் அவரின் 5 ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற பல சம்பவங்கள் தான். காரணம் ஒரு முதலமைச்சராக அவர் என்ன தீர்வு காண வேண்டும் என்கிற முடிவு எடுக்க முடியுமே தவிர, என்ன பிரச்னை இருக்கிறது என சொல்லுமிடத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் தான் உள்ளனர். ஆனால் பல பிரச்னைகள் ஸ்டாலின் காதுக்கு வந்தபோது அதைப்பற்றி விசாரிக்கும்போதும் அதிகாரிகள் முதல் அனைவரும் அதனை மூடி மறைக்கவே செய்தனர். ஸ்டாலினும் தன்னிடம் உள்ள அனைவரையும் கண்மூடித்தனமாக நம்பியுள்ளார் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது.

குறிப்பாக அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு முதலமைச்சர் ஸ்டாலினின் நிழலாக தன்னைக் காட்டிக் கொண்டார். அவர் இல்லாமல் அணுவும் அசையாது என காட்டினார். திருப்பரங்குன்றம் பிரச்சனை, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடங்கி எதிலும் மு.க.ஸ்டாலினை யோசிக்க விடாதபடி குறைகளை வெளிக்காட்டாமல் அதனை மூடி மறைக்கும் வேலையை சேகர்பாபு உள்ளிட்ட அனைவரும் செவ்வென செய்தனர். இதுவே திமுகவுக்கு மிகப்பெரிய அடி விழ காரணமாக மாறி விட்டது. இனி புது ஆட்சி வந்துள்ள சேகர்பாபுவின் அரசியலின் அட்ராசிட்டிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...