தபால் வாக்குகள் தனித்தனி அறைகளில், ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் தனியாக பிரிக்கப்பட்டு, முறையான கட்டங்களின் அடிப்படையில் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் நிலை தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நடிகர் விஜய் 75 தபால் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 48 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் 34 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் 27 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
திரு. வி. க. நகர் தொகுதியில் த.வெ. க வேட்பாளர் 18 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.
ஆர். கே நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.
சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
லால்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.
கோவை( தெற்கு ) திமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.
ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
