வாக்குச்சாவடிக்குள் காவலர்கள் நுழைய தடை – கடுமையான வழிகாட்டுதலுடன் டிஜிபி அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, வாக்குச்சாவடிக்குள் காவலர்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என மாநில டிஜிபி கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்

1 மாதங்களுக்கு முன்
வாக்குச்சாவடிக்குள் காவலர்கள் நுழைய தடை – கடுமையான வழிகாட்டுதலுடன் டிஜிபி அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

டிஜிபி வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவசியமான சூழ்நிலையில், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காவலர்கள் வாக்குச்சாவடிகளின் வெளிப்புற நுழைவாயில் அருகே நின்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறும் காவலர்களுக்கு எதிராக உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார். அதேசமயம், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...