தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக-விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, மதுரை தெற்கு தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ-வான பூமிநாதன் மீண்டும் களம் காண்கிறார். இவருடன் கடையநல்லூர் தொகுதியில் தி.மு.ராஜேந்திரன், மொடக்குறிச்சியில் செந்தில்நாதன் மற்றும் சீர்காழியில் செந்தில்செல்வன் ஆகியோர் மதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இதர தோழமைக் கட்சிகளின் வேட்பாளர் விபரங்களும் வெளியாகியுள்ளன. மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார். அதேபோல், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நாகை தொகுதியில் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதுவும் வேட்பாளர்களாகக் களம் இறங்குகின்றனர்.
திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!
திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் 4 வேட்பாளர்களையும், மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பிலான வேட்பாளர்களையும் அக்கட்சிகளின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1 வாரங்களுக்கு முன்

உங்கள் கருத்து
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...
இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: