தமிழகத்தில் தவெக அதிரடி: கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை வீழ்த்திய தவெக வேட்பாளர் – பல முக்கிய தொகுதிகளில் வெற்றி மழை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) பல முக்கிய தொகுதிகளில் அதிரடி வெற்றிகளைப் பதிவு செய்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

1 மணி நேரத்திற்கு முன்
தமிழகத்தில் தவெக அதிரடி: கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை வீழ்த்திய தவெக வேட்பாளர் – பல முக்கிய தொகுதிகளில் வெற்றி மழை

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக வேட்பாளர் பி.எஸ்.பாபு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு . க . ஸ்டாலின்-ஐ சுமார் 8,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்த முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

கோப்பம் தொகுதியில் தவெக வேட்பாளர் தென்றல் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கட்சியின் வலிமையை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கட்ராமன் சுமார் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முக்கிய எதிரணி வேட்பாளரான தமிழிசை சௌந்தர்ராஜனை தோற்கடித்துள்ளார். மொத்தம் 54,000-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் 1,08,181 வாக்குகள் என்ற அபார வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூரில் தவெக வேட்பாளர் விஜய் சரவணன் 18,653 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார்.

சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளர் கீர்த்தனா 70,031 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதுடன், மாதவரம் தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.எல். விஜய் பிரபு 67,983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கட்சியின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

இந்த தேர்தலில் தவெக  சென்னை, தூத்துக்குடி, சிவகாசி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, கொளத்தூர் போன்ற முக்கிய மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியில் ஏற்பட்ட மாற்றம், மாநில அரசியல் சூழ்நிலையை முற்றிலும் மாற்றக்கூடியதாக மதிப்பிடப்படுகிறது

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...