சென்னையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு இலவச வாகன சேவை – மாநகராட்சி அறிவிப்பு

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் வாக்குரிமையை எளிதாக பயன்படுத்தும் வகையில் சிறப்பு இலவச வாகன சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

1 மாதங்களுக்கு முன்
சென்னையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு இலவச வாகன சேவை – மாநகராட்சி அறிவிப்பு

மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், உடல் நல குறைபாடுகள் அல்லது வயது காரணமாக வாக்குச்சாவடிக்கு செல்ல சிரமம் உள்ளவர்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையான வாக்களிப்பை அனைவரும் சிரமமின்றி நிறைவேற்றும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் “சக்ஷம்” செயலியின் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், மாவட்ட தகவல் மைய உதவி எண் 1950, மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள் 18004257012- ஐ தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

இதனுடன்,

மாற்றுத்திறனாளி நல அலுவலர் (சென்னை வடக்கு) பி. சரவணகுமார் – 94443968097

மாற்றுத்திறனாளி நல அலுவலர் (சென்னை தெற்கு) சீனிவாசன் – 9841696693

என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் அதிகளவில் வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...