தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் வசதிகளை உறுதி செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு விஜய் கடிதம்

தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்

3 வாரங்களுக்கு முன்
தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் வசதிகளை உறுதி செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு விஜய் கடிதம்

கடிதத்தில், தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் போலீஸ் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண் வாக்காளர்களின் பாதுகாப்பையும் வசதிகளையும் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது ஒரு பெண் காவலர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் பெண்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, தேர்தல் விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை செயல்பாட்டை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் தொடர்பான முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ கண்காணிப்பையும் பலப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

வாக்குச்சாவடிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக, வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க போதுமான இருக்கைகள், குடிநீர் வசதி மற்றும் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் நலனில் எந்த குறையும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...