இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்கு நிலவரங்களின் படி, தனித்து போட்டியிட்ட இந்த புதிய கட்சி, மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் புதியதாக உருவான ஒரு அரசியல் கட்சி, தனது முதல் தேர்தலிலேயே இத்தகைய வாக்கு வலிமையை வெளிப்படுத்துவது அரிதான ஒன்று. அந்த வகையில், த.வெ.க வின் இந்த முன்னேற்றம் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் எந்த புதிய கட்சியும் முதல் முயற்சியிலேயே இத்தகைய அளவிலான வாக்கு ஆதரவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் முழுவதும் பல முக்கிய தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதுடன், பல முக்கிய அரசியல் நட்சத்திரங்களையும் பின்னுக்கு தள்ளி வெற்றி பாதையில் நகர்ந்து வருகின்றனர். இது கட்சியின் அடிப்படை வலிமையையும், மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்ற மனநிலையையும் வெளிப்படுத்துகிறது.
கட்சியின் இந்த அபாரமான சாதனையால், த.வெ.க தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
தனித்து போட்டியிட்டு, மிக குறுகிய காலத்தில் இந்த அளவிலான வாக்கு ஆதரவைப் பெற்றிருப்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தி உருவாகியிருப்பதைக் காட்டுகிறது. இது பாரம்பரிய அரசியல் அமைப்புகளுக்கு சவாலாக அமையும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.
