திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இன்று மு.க.ஸ்டாலின் - பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

M

எழுதியவர்

1 மாதங்களுக்கு முன்
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ஏற்கனவே தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தொகுதிப் பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் முன்னிலையில் இந்தத் தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாகத் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடுவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஏற்கனவே மற்ற கூட்டணியில் ஏற்கனவே மற்ற கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸிற்கு 28, விசிகவிற்கு 8, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 5, மதிமுகவிற்கு 4 மற்றும் ஐயுஎம்எல், மமக, கொமதேக ஆகிய கட்சிகளுக்குத் தலா 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேமுதிகவுடனான இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...