"முரசு முழங்கட்டும்" - பிரச்சாரப் பாடலை வெளியிட்டது தேமுதிக!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான அதிகார மாற்றத்தை வலியுறுத்தி தேமுதிக தனது புதிய பிரச்சாரப் பாடலை வெளியிட்டுள்ளது.

M

எழுதியவர்

1 மாதங்களுக்கு முன்
"முரசு முழங்கட்டும்" - பிரச்சாரப் பாடலை வெளியிட்டது தேமுதிக!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் பரப்புரைப் பாடல்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது தேமுதிகவும் தனது தேர்தல் பிரச்சாரப் பாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. "திசையெட்டிலும் முழங்கட்டும் முரசு" எனத் தொடங்கும் இந்தப் பாடலில், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை தேமுதிக அரசுக்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தமிழகம் சிறந்து விளங்கவும், அதிகாரப் பாதையை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து நடைபோடவும் இந்தப் பாடல் அழைப்பு விடுக்கிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...