DGP Dharmarajan | இனிமேல் விஜய்க்கு A டூ Z இவர் தான்.. யார் இந்த டிஐஜி தர்மராஜன்?

யார் இந்த DGP தர்மராஜன் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
DGP Dharmarajan | இனிமேல் விஜய்க்கு A டூ Z இவர் தான்.. யார் இந்த டிஐஜி தர்மராஜன்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரின் பாதுகாப்பு பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே யார் இந்த தர்மராஜன் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விஜயைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் இன்றைய நாளில் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிலையில் விஜய்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீடு, பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஆகியவை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்க்கான தனிப்பட்ட பாதுகாப்பு பொறுப்பானது டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் விஜயை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

விஜயின் பயணம் மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு உறுதி செய்வதுதான் டிஐஜி தர்மராஜனின் பணியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

யார் இந்த தர்மராஜன்?

கடந்த 2009 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சைச் சேர்ந்த தர்மராஜன் வேலூர் சரக டிஐஜி யாக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இவர் மத்திய அரசின் பணியில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சென்னையில் உளவுத்துறை இணை கமிஷனராக பணியாற்றிய தர்மராஜன் கடந்த ஆண்டுதான் வேலூர் சரகர் டிஐஜி யாக நியமிக்கப்பட்டார். தற்போது அவரிடம் தான் முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் தர்மராஜன் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சிறப்பான சேவைக்காக குடியரசு தலைவரின் காவல் பதக்கம் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

விஜய் 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய போது அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. தற்போது சட்டமன்ற தேர்தலில் வென்று முதலமைச்சரான பிறகு அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் இசட் பிளஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படும். இதன் மூலம் தனிப்பட்ட காவல்துறையினர், துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் என பாதுகாப்பு படை வாகனங்கள் சூழ அவர் எங்கும் பயணம் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...