தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தான் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன்படி, தளி தொகுதியில் டி.ராமச்சந்திரனும், திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் மாரிமுத்துவும் மீண்டும் களம் காண்கின்றனர். 2021 தேர்தலிலும் இதே தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது மக்கள் பிரதிநிதிகளாக உள்ள இவர்களுக்குக் கட்சி மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் பி.மகாலிங்கமும், திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவியும், பவானிசாகர் (தனி) தொகுதியில் பி.எல்.சுந்தரமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ரவி மற்றும் பி.எல்.சுந்தரம் ஆகியோர் கடந்த தேர்தலிலும் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த பழைய முகங்களுக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறையும் முன்னுரிமை அளித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு: சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு!
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில், தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் இருவர் உட்பட கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 வாரங்களுக்கு முன்

உங்கள் கருத்து
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...
இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: