சென்னை சட்டமன்றத் தேர்தல்: 16 தொகுதிகளில் 15-இல் தவெக முன்னிலை

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் தவெக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

2 மணி நேரத்திற்கு முன்
சென்னை சட்டமன்றத் தேர்தல்: 16 தொகுதிகளில் 15-இல் தவெக முன்னிலை

ராயபுரம், சைதாப்பேட்டை, திருவிக்கா நகர், தியாகராய நகர், வேளச்சேரி, வில்லிவாக்கம், விருதும்பாக்கம், சேப்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட 15 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். துறைமுகம் தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தவெக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மொத்தத்தில், சென்னையில் தவெக அதிக வாக்குகள் பெற்று முன்னிலை நிலையை தக்கவைத்துக் கொண்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை இரண்டாவது சுற்றை எட்டியுள்ள நிலையில், பல தொகுதிகளில் முன்னிலை வித்தியாசம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் இரண்டாவது சுற்று முடிவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...